
கொழும்பு, ஜுன் 17
நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த மே மாதம் நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்வனவு நடவடிக்கைகளுக்கான முன்பதிவுகள், உற்பத்திகள் மற்றும் கொள்வனவுகள் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் மேலும் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலைமை காரணமாக இவ்வாறானதொரு நிலமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.