ப்ரைட் ரைஸால் பறிபோன இளம் அதிகாரியின் உயிர்; விசாரணை ஆரம்பம்!

தெஹியத்தகண்டியவில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணி புரிந்து வந்த அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கடந்த 15ஆம் திகதி ப்ரைட் ரைஸ் உட்கொண்ட அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

30 வயதான அதிகாரி தனுஷ்க சமன் குமார என்பவரின் மரணம் தொடர்பில் தெஹியத்தகண்டிய பதில் நீதவான் அனுருத்த யாப்பா பண்டார விசாரணைகளை மேற்கொண்டார்.

பொலன்னறுவை விசேட நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பித்து அதனை விரைவாக தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரி கடந்த 15ஆம் திகதி ப்ரைட் ரைஸ் உட்கொண்டதன் பின்னர் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அதிகாரி வயிற்று வலி பெற்றோரிடம் கூறியதுடன் வாந்தி எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் உட்கொண்ட ப்ரைட் ரைஸ் தொடர்பிலும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *