9 மாத சிசுவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்

அல்கிரிய, ஜூன் 17

கணவன் தொழில் தேடிச் சென்ற வேளையில், மனைவி தனது 9 மாத குழந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவமொன்று மாலிம்படை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தை கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த வீரதுங்க ஆராச்சிகே பசிது பிரபாத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது, வீட்டில் இருந்த குழந்தையும், 3 வயது குழந்தையும் அழும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டி வந்து பார்த்தபோதுதான் இந்த குற்றம் பற்றிய தகவல் தெரியவந்தது.

இதன்போது, குறித்த குழந்தை முச்சக்கரவண்டியில் அக்குரஸ்ஸ அரச வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு விஷம் கலந்த ஏதேனும் கொடுத்துவிட்டு தாய் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், தனது மூத்த குழந்தை மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதாகவும், தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கிடையாது எனவும் அந்த பெண் எழுதி வைத்திருந்த கடிதமொன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

22 வயதுடைய குறித்த பெண்ணை கைது செய்ய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இறந்த குழந்தையின் மரணம் குறித்து திடீர் மரண விசாரணைகள் நடத்தப்பட உள்ளது.

நீதவான் உத்தரவின் பேரில் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *