
போலி ஆவணங்களின் மூலம் வவுனியாவின் பல்வேறு இடங்களில் காணிகள் விற்பனை செய்யபடுவதானால் கொள்வனவு செய்பவர்கள் அவதானமாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் காணிகள் புலம்பெயர்ந்த மக்களின்
காணியாகவும் துப்பரவு செய்யப்படாத காணியாகவும் காணப்படுகின்றது .
இதனால் புலம்பெயர்ந்த சமூகத்தில் காணப்படுகின்ற மக்கள் தமது காணி தொடர்பான விடயத்தினை மாவட்ட மட்டம் பிரதேச செயலகத்தில் காணப்படுகின்ற காணி கிளைகளில் சரி பார்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார் .
காணிகளினை கொள்வனவு செய்பவர்களும் குறித்த காணிக்கான பிரதிகளை மாவட்ட செயலாகத்தின் ஊடாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார் .
மக்கள் விவசாயத்தில் அண்மைக்காலமாக கவனத்தை செலுத்தி வருகின்ற காரணத்தின் விளைவாக மக்கள் காணியினை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளார்.
எனவே குறித்த காணியினை கொள்வனவு செய்வதில் கவனம் கவனமாக செயட்படுமாறு காணி உரிமையாளர் தெரிவித்து உள்ளமை குறிப்பிடதக்கது.
பிற செய்திகள்