பணியாளர்கள் பற்றாக்குறை: கோடைகால விமான சேவைகளை குறைக்கும் கேட்விக்!

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கோடை காலத்தில் விமானங்களின் எண்ணிக்கையை கேட்விக் விமான நிலையம் குறைத்து வருகிறது.

தினசரி விமானங்களின் எண்ணிக்கை ஜூலையில் 825 ஆகவும் ஒகஸ்டில் 850 ஆகவும் குறைக்கப்படும். இது முந்தைய ஆண்டுகளில் 900ஆக இருந்தது.

அரசாங்கமும் கட்டுப்பாட்டாளர்களும் தங்கள் கோடை கால அட்டவணைகள் வழங்கக்கூடியவை என்பதை உறுதிப்படுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியதை அடுத்து இது வந்துள்ளது.

சமீபத்திய வாரங்களில் பிரித்தானிய விமான நிலையங்களில் ரத்து மற்றும் தாமதங்களால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் ‘மிகவும் நம்பகமான மற்றும் சிறந்த தரமான சேவையை அனுபவிக்க’ உதவுவதற்காக, அதன் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து விமானங்களை தற்காலிகமாக குறைக்கும் முடிவை எடுத்துள்ளதாக கேட்விக் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *