நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் வெகு நேரம் காத்திருப்பினும் பிக்குகளுக்கு இலகுவான முறையில் எரிபொருள் கிடைப்பதாக வரிசையில் நின்ற மக்கள் குற்றம் சுமத்துகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில பௌத்த துறவிகள் விகாரைகளின் வாகனங்களையும் நண்பர்களின் வாகனங்களையும் கொண்டுவந்து வரிசையை பொருட்படுத்தாமல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தாங்கள் துறவிகள் என்பதால் வரிசையில் நிற்கும் யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் பிக்குகள் அத்தியாவசிய சேவைகளுக்குள் அடங்காததால் அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென பல நாட்களாக வரிசையில் நிற்கும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.