சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் நபர்களுக்கு சவுதி அரேபியா வழங்கும் தண்டனையை வழங்க நாடாளுமனறத்திற்கு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றம் தொடர்பில் குற்றவாளிகளாக இனம் காணப்படும் நபர்களை சவுதியில் போன்று கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரிஷாத் பதியூதீனின் வீட்டில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்தமை குறித்து முழு நாடு மட்டுமல்லாது மக்களும் வெட்கப்பட வேண்டிய விடயம்.
Advertisement
இது முதல் சம்பவம் அல்ல. இதற்கு எதிராக மலையக மக்களை கொழும்புக்கு அழைத்து வந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.