சுவிட்சர்லாந்தின் டிசினோ மாநிலத்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் மொத்தமாக மூழ்கியது!

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாநிலத்தில் ஒரு மாதத்தில் கொட்டித்தீர்க்க வேண்டிய மழை, இரண்டு நாட்களில் பெய்துள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 1918கு பிறகு இதுபோன்ற உக்கிரமான மழையை டிசினோ மாநிலம் எதிர்கொண்டதில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஜூலை மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மொத்த மழையின் மூன்று மடங்கு, கடந்த இரு நாட்களில் கொட்டித்தீர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மான்டே ஜெனரோசோ பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

Advertisement

அத்துடன் கன மழை மற்றும் Breggia நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி எச்சரிக்கை நடவடிக்கையாக Balerna பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்று மூடப்பட்டுள்ளது.

Mendrisiotto பகுதியில் மொத்தமாக நிலச்சரிவு, பெருவெள்ளம், சுவர் இடிந்து விழுந்து விபத்து, மரங்கள் வேருடன் சாய்ந்தும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

அது மட்டுமின்றி, அங்குள்ள சாலைகள் மொத்தமும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *