ரொறன்ரோ உணவகத்தினுள் உயிருடன் கொளுத்தப்பட்ட இளைஞர்

ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரொறன்ரோ உணவகம் ஒன்றில் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவத்தில் தற்போது பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 10ம் திகதி அதிகாலை 3 மணியளவில் கீல் தெருவில் அமைந்துள்ள உணவகம் மற்றும் மதுபான விடுதிக்கு தீ விபத்து தொடர்பில் அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள், இளைஞர் ஒருவரை தீக்காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் மீட்டுள்ளனர்.

Advertisement

முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்தவர் எனவும், 18 வயதேயான Shahriyar Safarian என்பதும் தெரிய வந்தது.

மேலும், குறித்த உணவகத்தினுள் ஏற்பட்ட தீ விபத்தானது திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இதனிடையே, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட இளைஞர் Shahriyar Safarian சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த விவகாரத்தை தற்போது கொலை வழக்கு விசாரிக்கும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து தொடர்பான காரணம் குறித்தும் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *