21 நாடுகள் விதித்துள்ள பயணத் தடைகளை நீக்குமாறு கோரியுள்ளதாக இலங்கை சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கோரிக்கையை வெளியுறவு அமைச்சகத்தின் உதவியுடன் முன்வைத்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸ் தொற்று விளைவாக விதிக்கப்பட்ட இலங்கைக்கு பயணம் செய்வதற்கான தடையை நீக்குமாறு 21 நாடுகளிடம் கோரப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், மலேசியா, சிங்கப்பூர், இத்தாலி, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, நோர்வே, ஜப்பான், அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இதில் அடங்கும்.
இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விமான நிறுவனங்கள் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையுடன் இணைந்து ஒரு கூட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு செப்ரெம்பர் மாதத்திற்குள் 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்டுமென அரசாங்கம் நம்புவதாகவும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக நாட்டில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் முயற்சிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.