இரத்தினபுரி − கஹவத்தை பகுதியில் கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கலின் பெறுமதி தொடர்பில் தற்போது பரஸ்பர கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
தேசிய இரத்தினக்கல் அதிகார சபை கூறும் விதத்தில், குறித்த கல் பெறுமதி வாய்ந்தது கிடையாதென இரத்தினக்கல் துறை சார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சுமார் 510 கிலோகிராம் எடையுடைய இரத்தினக்கல் கொத்தொன்று, இரத்தினபுரி − கஹவத்தை பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கிடைத்திருந்தது.
Advertisement
அத்தோடு இந்த கல்லின் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் என திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
எனினும், தேசிய இரத்தினக்கல் அதிகார சபை கூறும் அளவிற்கு, குறித்த கல் பெறுமதி அற்றதென அந்த துறை சார் நிபுணர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
மேலும் , இந்த வகையான இரத்தினக்கல் பெறுமதி வாய்ந்தது என தேசிய இரத்தினக்கல் அதிகார சபையின் தலைவர் திலக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.