யாழ். மாவட்டத்திற்கு அரசாங்கத்தினால் மேலதிகமாக இரண்டு இலட்சம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
30 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் யாழில் இன்று (29) முதல் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட யாழ். பரியோவான் கல்லூரி தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் கொழும்புத்துறை – வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தாயார் ஒருவர் தடுப்பூசி பெறச் சென்றுள்ளார்.
பதிவுகளை முடித்து தடுப்பூசி ஏற்றும் இடத்தில் ஒரு தாதி குறித்த தாயாருக்கு தடுப்பூசியை வழங்கிக் கொண்டிருந்தபோது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததன் காரணமாக ஊசியை அவசரமாக போட்டு சென்றுள்ளார்.
அதனை அறியாது இன்னொரு தாதி மற்றைய கையிலும் ஊசி செலுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
எனினும் குறித்த ஊசி ஏற்றப்பட்ட நபரை ஒரு மணித்தியாலமாக அவதானித்து அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய பின் அவரை வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையையும் பரிசோதித்து வருகிறோம் எனினும் அதன் அடிப்படையில் அதற்குரிய முடிவு எடுக்கப்படும் என யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.