
கொழும்பு,ஜுன் 29
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நிறைவில் அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்ஸில் 03 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய இலங்கை அணி 59 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
அணிசார்பில் அதிகபடியாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் 39 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணியின் நெதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்வெப்சன் 55 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இன்றைய நாள் ஆட்ட முடிவில் 25 ஓவர்களுக்கு 03 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்படி, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியைவிட அவுஸ்திரேலிய அணி 114 ஓட்டங்கள் பின்தள்ளிய நிலையில் உள்ளது.
களத்தில் உஸ்மன் கவாஜா 47 ஓட்டங்களுடனும், டிராவிஸ் ஹெட் 06 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.