எரிபொருள் ஊழல் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

யாழ் மாவட்டத்தில் வழங்கப்படுகின்ற எரிபொருளில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றால் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியின் கீழ் செயற்படும் பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு உடனடியாக அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த 0776344246 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தமது முறைப்பாடுகளை வழங்க முடியும் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், எரிபொருள் பதுக்கல், பாரபட்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தமது தகவல்களை குறித்த தொலைபேசி ஊடாக வழங்க முடியும்.

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய சேவை வழங்குவதற்கான எரிபொருள் விநியோகத்தை இராணுவத்தின் கண்காணிப்பில் செயல்படுத்தி வரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *