தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது அல்லது கூடுதல் தளர்வுகளை வழங்குவது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இதன்போது சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் உயிர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பாடசாலை, கல்லூரி, திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.