அரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு!

அரச ஊழியர்கள் அனைவரையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்களின் கீழ் எதிர்வரும் ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் வழமை போன்று அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களைக் கொண்டு அத்தியாவசியமான அரச பணிகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுற்றுநிருபங்களும் இரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *