இரத்தினபுரி – இரக்குவானை பகுதியில் 80 கிலோ கிராம் நிறையுடைய மற்றுமொரு நீல மாணிக்க கல்லொன்று இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீல மாணிக்கக் கல் கொழும்பிலுள்ள வியாபாரி ஒருவரிடமிருந்து, பரிசோதனைக்காக தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த மாணிக்கல்லின் பெறுமதியை மதிப்பிட்ட பின்னர் , எதிர்வரும் நவம்பர் மாதமளவில் சர்வதேச மாணிக்கக்கல் ஏலத்திற்கு விடுவதாக தங்க ஆபரண அதிகாரசபை அதிகாரிகள் அதனை பெற்றுக் கொண்ட நபரிடம் உறுதியளித்துள்ளனர்.
Advertisement
இதேவேளை கடந்த வாரம் 510 கிலோ கிராம் எடையுடைய உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல கல் ஒன்று இரத்தினபுரி பகுதியில் கிணறு தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் வரை பெறுமதியுடையது என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.