டொனால்ட் ட்ரம்ப் முதல் மனைவி காலமானார்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவியும் மூன்று குழந்தைகளின் தாயுமான இவானா ட்ரம்ப் தனது 73வது வயதில் நேற்று 14ஆம் திகதி (ஜூலை 14) காலமானார்.

நியூயோர்க் நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்றும் அவரது இறப்புக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் டொனால்ட் ட்ரம்பை 977 இல் திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1992 இல் அவர்கள் விவாகரத்து செய்தனர்.

அவர்களுக்கு மூன்று குழந்தைகள் – டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் டிரம்ப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *