
தற்பொழுது மூடப்பட்டு இருக்கின்ற பாடசாலைகள் அனைத்தையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் மீளத்திறக்கும் எண்ணம் அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் பரவல் சம்பந்தமான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இதற்காக இந்த மாதம் முதல் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன.
அதே நேரத்தில் பத்து வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பு ஊசிகளைச் செலுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது குறைவடைந்து செல்கின்ற கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகுமாக இருந்தால் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து மீளாய்வு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.