வவுனியா, வெண்கல செட்டிக்குள பிரதேசத்திற்குட்பட்ட வாழவைத்த குளத்தில் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாசலில் நிர்மானிக்கப்பட்ட காரியாலய கட்டடம் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், செட்டிக்குள பிரதேச சபை தவிசாளர் ஜெகதீஸ், அல்ஹிமா தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் நூருல்லாஹ், அத்-தைபா மனிதாபிமான நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ரிஸ்வான், பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உலமாக்கள், பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த கட்டடம் கே.கே.மஸ்தானின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







