பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் கலந்துரையாடி எமது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தமது நிலைப்பாடு மாறலாம்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்காது நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டிலே இதுவரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சியை சேர்ந்த நானும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களும் உள்ளோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்த வேட்பாளர்களும் தமக்கு ஆதரவளிக்குமாறு எம்மிடம் இதுவரையில் கோரவில்லை. அப்படி அவர்கள் கோரும்பட்சத்தில்,எமக்கான உறுதி மொழிகளை வழங்கும் பட்சத்தில் சில வேளைகளில் எமது நிலைப்பாடு மாறலாம் என்றார்.
பிறசெய்திகள்