
அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் கடமையாற்றிய பிரிகேடியர் அனில் சோமவீர பணி இடைநிறுத்தப்பட்டதாக பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அதிகாரி இராணுவத் தலைமையகத்தில் வேறு கடமைகளை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிறசெய்திகள்