மட்டக்களப்பு – செங்கலடி கோட்டா கோ கம போராட்டக் களத்தில் கேக் வெட்டி வெடிக்கொள்ளுத்தி கோட்டபாய ராஜபக்க்ஷவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி வெற்றிக் கொண்டாட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேட்டா கோ கம போராட்டக்காரர்கள் கோட்டா கோ கம போராட்ட இடத்தில் கோட்டபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதை அடுத்து செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் தலைமையில் தமது வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடினர்.
கோட்டபாய ராஜபக்க்ஷவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி வெடி கொள்ளுத்தி கேக் வெட்டி கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.
இதேவேளை தமது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக கபுடா என வாசகம் பொறிக்கப்பட்ட கேக் ஒன்றையும் வெட்டி போராட்ட இடத்தில் பரிமாறிக் கொண்டதுடன் பொது மக்களுக்கு குளிர்பாணமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




பிறசெய்திகள்
- தமிழ் – முஸ்லிம் கட்சிகள் எனக்கே ஆதரவு! – சஜித் நம்பிக்கை
- உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை கையளித்தது அமெரிக்கா
- ஐரோப்பாவில் வரலாறு காணாத காலநிலை மாற்றம்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka