ரணில் ஜனாதிபதியானால் குழப்பமான சூழலே நிலவும்-அருள் ஜெயந்திரன் சுட்டிக்காட்டு!

இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகும் கனவோடு காத்திருக்கும் நிலையில்  அவர் ஜனாதிபதி ஆனால் நாட்டில் தொடர்ந்தும் குழப்பகரமான சூழலிலே நிலவும் என மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் 90 நாட்களுக்கு மேலாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சபை பதவி விலக கோரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இத்தொடர்புராட்டத்தின் எதிரொலியாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது பதவியை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ஊடாக அறிவித்துள்ளார்.

இன் நிலையில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

என்னிடம் போராட்டக்காரர்கள் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது பதில் ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகும் கனவோடு காய் நகர்த்தல் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க வை பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்தாள் நாட்டில் தொடர்ச்சியாக குழப்பகரமான சூழ்நிலை தொடர்ந்தும் இருக்கும்.
இதே வேலை நாட்டின் ஜனாதிபதியாக வர விரும்புவோர் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு சீர் செய்யப் போகிறோம் என்ற திட்ட உறுதிமொழியை வழங்குபவர்களையே பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.

மேலும் தற்போதுள்ள அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மலையாக சிறுபான்மை கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கும் கட்சியினரிடம் தமது மக்கள் தொடர்பான கோரிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *