
உக்ரைன் நிலப்பரப்புக்கள் மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் தொடர்ந்தும் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் பல தொடர்ந்தும் ஆயுதங்களையும், இராணுவ தளபாடங்களையும் வாரி வழங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் முதற் தடவையாக ஆயுத கொள்வனவை செய்யப் போவதாக ரஷ்யா அறிவித்திருக்கின்றது.
ரஷ்யா மற்றும் ஈரானுக்கிடையிலான உறவு மிக அண்மையில் புதுப்பொலிவு பெற்றிருக்கின்றது. இந்த புதுப் பொலிவிற்கு அடிப்படை காரணம் அமெரிக்கா என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான முரண்பாடுகளே ரஷ்யா ஈரானுடன் நெருக்கமான உறவை மேற்கொள்ள வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ரஷ்யா தற்போது ஈரானிடமிருந்து அதிநவீன தாக்கம் திறன் கொண்ட ஈரானின் உற்பத்தியான ‘ட்ரோன்களை’ கொள்வனவு செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன்கள் மனித செயற்பாடு இன்றி இயங்கக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈரானின் ஆயுத உற்பத்திகளை பார்வையிடும் பொருட்டு ராஷ்யாவின் பாதுகாப்புத்துறையினர் ஈரானிற்கு சென்றமையை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர் ஜக்கி சுவிலியன் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.