யாழ்ப்பாணம் நகரில் உள்ள கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபா பறித்துச் செல்லப்பட்டுள்ளது .
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளது.
நேற்றுக் காலை ஆலயத்துக்கு வந்தத ஒருவர் தொழிலில் முதலிடவிருந்த 10 லட்சம் ரூபாவை, பூசையில் வைத்து எடுத்துத் தருமாறு கோரியுள்ளார்.
பூசகரும் பணத்தை பூசையில் வைத்துவிட்டு எடுத்துக்கொடுத்தபோது, அங்கு திடீரென வந்த இருவர் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிறசெய்திகள்