
மீண்டும் சிங்கள தமிழ் தேசிய வாதத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த வெற்றியானது ஒரு நிரந்தர வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்று இருக்கின்றார் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வரலாற்று ரீதியாக சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் நம்மை பொறுத்த வரையிலே தமது ஆ ட் சிக்கு ஆபத்தான சூழல் வருகின்ற பொது அனைவருமே கட்சி பேதம் இன்றி அதனை தக்க வைத்து கொள்வார்கள் இதனை வரலாற்று ரீதியாக நாங்கள் பார்த்துள்ளோம்.
இந்த முறையும் தென்னிலங்கையில் ஏற்பட் ட குழப்பங்கள் பொருளாதார நெருக்கடி தொடர்பாக மக்களெழுச்சி ஏற்பட்டு பின்னர் அரசியல் போராட்டங்களாக மாற்றப்பட்டு இன்று அவை தனிக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக போராட்டத்திற்கு பின்னால் நிண்டு செயற்பட்ட சக்திகள் சிங்கள தேசிய வாதத்திற்கு ஆபத்தாகிவிடும் என்ற எண்ணத்தில் இன்றைய அரசியல் நிகழ்வு நிறைவேறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்படட ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கும் டலஸ் அழகப்பெருமாளவுக்கும் இடையில் போட்டி ஏற்பட்டது.
உண்மையிலே இந்த வெற்றி ஏற்படாது இருந்தால் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டு இருக்கும்.
இவ்வாறு ஏற்படுகின்ற சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக தெரிந்து கொண்டு அரசியல் தலைவர்கள் செயற்படுவது மிகவும் ஆபத்தான விடயம் எதிர்காலத்தில் தமிழர் தரப்பு அரசியல் வாதிகள்,குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில தலைவர்கள் எடுத்த முடிவு தமிழ் மக்களது முடிவல்ல எனவும் தெரிவித்தார்.
இந்திய இலங்கை தொடர்பான விடயங்களில் தொடர்ந்தும் தவறான அணுகுமுறைகளை கையாள்கின்றது.இதனை தவிர்த்து இந்திய தனது அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.தொடர்சியாக சந்தர்ப்பவாத அரசியலோடு காய் கோர்த்து செயற்படுவதை தவிர்க்க வேண்டும்.
ஆகவே எதிர்காலத்தில் உண்மையான நேர்மையான மக்களை நேசிக்கின்ற அரசியல் தலைவர்களோடு சேர்ந்து பயணிக்க வேண்டும் என இந்தியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளினுக்கு தெரிவிக்கின்றோம்.
மேலும் தற்போது ஏற்பட்டிருக்கின்ற ஆட் சி மாற்றத்தில் நாங்கள் என்ன தீர்மானங்களை எடுக்கின்றோம் என்பதை நோக்குகையில் இரண்டரை ஆண்டுகள் நிலையான ஜனாதிபதியாக இருக்க போகும் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் தொடர்பில் சட்ட ரீதியாகவும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் சிறந்த தீர்வுகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம்.
மேலும் தென்னிலங்கை போராட்டக்காரர்களுக்கு ஆதரவான கடசிகளும் நிதானமாக செயற்பட வேண்டும் சந்தர்ப்பவாத அரசியலுக்கான தமிழ் மக்களை பயன்படுத்த வேண்டாம் ,தென்னிலன்ளை போராடடம் தொடர்பாக நிதானமாக செயற்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழ் மக்கள் தொடர்பில் சரியான தீர்வு திட்ட்ங்களை சரியாக கையாண்டு தீர்க்கப்பட வேண்டும். எனவே எதிர்காலத்தில் எவ்வாறு தமிழ் தேசிய அரசியலை கொண்டு செல்ல வேண்டும்.என்பது தொடர்பாகவும் மிகவும் விழிப்பாகவும் இருந்து செயற்பட வேண்டும் என்பதை கேட்டு கொள்கின்றோம்.
எம்மை பொறுத்த வரைக்கும் இனி எந்த சக்திகளும் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும் வரை இலங்கையை தோற்கடிக்காது என கூறியுள்ளார்.
பிறசெய்திகள்