25 மாவட்டங்களில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள சோதனை

தேசிய எரிபொருள் அனுமதி(National Fuel Pass program) திட்டம் 25 மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சோதனை செய்யப்படவுள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு நேற்றையதினம் கொழும்பில் 2 இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்தத் திட்டம் 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று சோதனை செய்யப்படும்.

சோதனை முடிவடைந்தவுடன் இதனை தேசிய அளவில் அறிமுகப்படுத்தலாம் என நம்புகிறோம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *