மின்சார உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் இன்றையதினம் (23ஆம் திகதி) 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களுக்கு பகலில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும் என ரத்நாயக்க தெரிவித்தார்.