
கொழும்பு,ஜுலை 26
மே 09 அமைதியின்மை சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை மீறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அமைதியின்மை சம்பவத்தின் போது போராட்டக்காரர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குவதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் பொலிஸ்மா அதிபர் தவறியதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.