
கொழும்பு,ஜுலை 26
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் இன்றாகும்.
நேற்று முன்தினம் ஆரம்பமாக இப்போட்டியில், முதலில் துடுப்பாடிய இலங்கை அணி இரண்டாம் நாளான நேற்று, முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில், நேற்று தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 231 ஓட்டங்களை பெற்ற நிலையில், இன்றைய தினம் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அகா சல்மான் 62 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரமேஷ் மெண்டிஸ், 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.