
மியன்மார், ஜுலை 26
மியன்மார் மனித உரிமை ஆர்வலர்களுக்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனை மக்களுக்கான நீதி என அந்த நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
மியன்மாரில் மனித உரிமை ஆர்வலர்கள் நால்வர் தூக்கிலிடப்பட்டமைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்க உதவி வழங்கியதாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களால் குறித்த நால்வர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது மக்களுக்கான நீதியாகும் எனவும் உயிரிழந்தவர்களுக்கு குறித்த தண்டனையைப் பெற்றுக் கொள்வதகற்கான தகுதி காணப்பட்டதாகவும் மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.