தனது பிரதான உற்பத்திகளை நியுசிலாந்திற்கு ஏற்றுமதி செய்யும் இந்தோனேசியா!

இந்தோனேசியா முதற் தடவையாக தனது பிரதான உற்பத்தியான இரும்பு மற்றும் உலோக உற்பத்திகளை நியுசிலாந்திற்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய 3,800 மெற்றிக் தொன் உலோக உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் உலகில் இந்தோனேசியாவின் உலோக உற்பத்திகள் தரம் வாய்ந்த உற்பத்திகள் என்ற புகழை பெற்றுக் கொண்டுள்ள நிலையில் கடந்த வருடம் சுமார் 21.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாக இந்தோனேசியா பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் இந்தோனேசியாவிடமிருந்து மேற்படி உற்பத்திகளை தாம் பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் இதுவே முதற்தடவை என்றும் நிச்சயாக இந்தொனேசியாவின் உற்பத்திகளை நியுசிலாந்து ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது நியுசிலாந்தின் வெளிவிவகார அமைச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *