தற்போதைய அரசு சட்டப்பூர்வமானது. அது அரசமைப்புக்கு உட்பட்டது. எனவே, அவசரகால சட்டத்துக்கு இம்முறை ஆதரவாக வாக்களிப்போம். – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
இந்த நிலையில் அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மக்களின் அறவழி போராட்டத்தை மதிக்கின்றோம். ஆனால் தற்போது நாட்டை வீழ்த்துவதற்கு திட்டமிடப்படுகின்றது. எமக்கு இந்த நாடு அவசியம். ரணில் ஆட்சியில் அமைச்சு பதவி வேண்டாம். எதிரணியில் இருந்தால்கூட எமக்கு நாடு முக்கியம். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.
அதேவேளை, அவசரகால சட்டம் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அடுத்த மாதம் எதிராக வாக்களிப்போம்.” – என்றும் விமல் குறிப்பிட்டார்.