
கொழும்பு, ஜூலை 27:
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் தற்போதைய நிலை குறித்தும், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி செல்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க தூதுவரும், ஜனாதிபதியின் ஊடகப்பிரிவும் தகவல்களை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே, ஜனாதிபதி செயலத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதன் பின்னர், அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி ரணிலை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.