
கொழும்பு, ஜுலை 28
வர்த்தக நிறுவனங்களில் சேவையில் ஈடுபடும் பல்வேறு வாகனங்களுக்கு தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்தை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இயந்திரங்களுக்கான வாராந்த எரிபொருள் தேவை தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.