கோத்தா கோ ஹோம் செயற்பாட்டாளரான பாதிரியாருக்கும் பொலிஸ் வலை வீச்சு!

அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் ‘ கோத்தா கோ ஹோம் ஆர்ப்பாட்டத்தில் முன்னிலையாக தொடர்ந்து செயற்பட்டுவரும் அமில ஜீவந்த பீரிஸ் என்ற பாதிரியாரைக் கண்டதும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

குறித்த பாதிரியார் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக் களங்களிலும் , அவர் சென்று வரும் இடங்களிலும் தேடப்பட்டு வருகின்றார் .

இரத்தினபுரியில் அந்தப் பாதிரியார் தங்கியி ருந்த தேவாலயத்துக்கும் பொலிஸார் சென்று அங்கு தேடுதல்களை நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *