யாழ்.பல்கலைக்கழக “மானுடம்” ஆய்வு மாநாட்டில் சிறப்பு வயலின் இசைக்கச்சேரி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சர்வ தேச ஆய்வு மாநாடான ‘ மானுடம் 2022 ‘ இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் , இந்த மாநாட்டின் ஓரம்சமாக சிறப்பு இசை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன .

இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் இசைத்துறையின் வயலின் இசை மாணவர்கள் பிரபல வயலின் இசைக்கலைஞரும் விரிவுரையாளருமான சுந்தர மூர்த்தி கோபிதாஸின் தயாரிப்பில் ‘ ஸ்வர சங்கமம் ‘ என்ற அளிக்கையும் . அதனைத் தொடர்ந்து கோபி தாஸின் ‘ விரலிசை ‘ என்ற அளிக்கையும் சிறப்பு இசை நிகழ்ச்சிகளாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .

இசை நிகழ்சிகள் மாலை 7 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றப்படுகின்றன .

இரண்டாம் நாளான நாளை சனிக்கிழமை நாற்பதுக் கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் பதின்மூன்று அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *