
சீனாவின் விண்வெளி ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் யுவான் டெங் 5 கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் 5 நாட்கள் மாத்திரம் நங்கூரமிட அனுமதி வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் தொடர்பாக அந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள குறித்த கப்பல் அவசியமான வசதிகளைப் பெற்ற பின்னர் இந்து சமுத்திரத்தின் வடமேல் கடற்பரப்பில் சுமார் ஒரு வார காலம் நங்கூரமிடப்பட்டு விண்வெளி மற்றும் செய்மதி கட்டுப்பாடு மற்றும் ஏனைய ஆய்வுகள் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
யுவான் டெங் 5 கப்பல் கடந்த ஜுலை மாதம் 13 ஆம் திகதி சீனாவின் பியேன் துறைமுகத்திலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்