பொதுநலவாய விளையாட்டுப் போட்டி : பதக்கபட்டியலில் முதல் இடத்தில்அவுஸ்ரேலியா

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரையில் முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் அவுஸ்ரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் இப்போட்டியில் 22 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 52 பதக்கங்களை அவுஸ்ரேலியா பெற்றுள்ளது.

11 தங்கம், 16 வெள்ளி, 7வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 34 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து, 10 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன், மூன்றாம் இடத்திலும், 4 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் தென்னாபிரிக்கா 4 ஆவது இடத்திலும் உள்ளது.

மொத்தம் 18 பதக்கங்களுடன் கனடா 5 ஆவது இடத்திலும் 6 பதக்கங்களுடன் இந்தியா 6 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *