நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு, ஓகஸ்ட் 3

நுவரெலியா – பிளக்பூல் பகுதியில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவை சீர்செய்து, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

rnஇதேவேளை,  சீரற்ற காலநிலையினால், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஹற்றன் – கொழும்பு மற்றும் ஹற்றன் – கண்டி வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து, கினிகத்ஹேன பகதுலுவ பகுதியிலும், ஹட்டன்- கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து ஸ்ரெதட்ரன் பகுதியிலும் இன்று (3) அதிகாலை முதல் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *