
ரஷ்யா தொடர்ந்தும் தனது பொருளாதார பலத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு இரண்டாவது பெரிய எரிவாயு தளமொன்றை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் அதிபர் விளாடிமிர் புடின் கைச்சாத்திட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி எரிவாயு தளமானது ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் நிறுவப்படவுள்ளதாகவும், இதற்கு Sakhalin-2 எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பிரதான எரிவாயு நிறுவனமான Gazprom PJSC நிறுவனம் முழுமையான எரிவாயு உற்பத்தியில் 50 வீதமான பங்கை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்பொழுது நிர்மாணிக்கப்படவிருக்கும் புதிய எரிவாயு தளம் ஆரம்பத்தில் 25 வீதமான எரிவாயு உற்பத்தி பங்குகளைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய எரிவாயு தள உருவாக்கத்தின் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ரஷ்யா அனுமதிக்க இருப்பதாகவும் குறிப்பாக யப்பானுடன் புதிய எரிபொருள் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முனைப்புடன் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.