
வத்தளை – அடம்பொலவத்தை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.
இனந்தெரியாத நபர் ஒருவர் நேற்று (04) இந்தக் கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் களஞ்சியசாலை உதவியாளராக கடமையாற்றும் இவர் வத்தளை – ஹந்தல பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிற செய்திகள்