கைவிடப்பட்டது தனியார் பேருந்து சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு

சில தனியார் பேருந்து சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நேற்று மாலையுடன் கைவிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்ஜித் தெரிவித்துள்ளார்.

கிவ்.ஆர் குறியீட்டு முறைமையின் கீழ் பேருந்து போக்குவரத்துக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில்லை என தெரிவித்து சில தனியார் பேருந்து சங்ககங்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்திருந்தது.

நேற்றைய தினம் குறைந்தளவான பேருந்துகளே சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

நேற்று நள்ளிரவு முதல் 11.4 சதவீதத்தால் பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள சந்தரப்பத்தில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நாடுமுழுவதும் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கும், பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் இன்று அமைக்கப்பட்ட புதிய டீசல் நிரப்பு நிலையம் மூலம், பேருந்து ஒன்றுக்கு 170 லீற்றர் டீசலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய பகுதிகளிலும், இலங்கை போக்குவரத்து பேருந்து சாலைகள் மூலம் டீசலை வழங்குவதை ஆரம்பிக்க கட்டுப்பாட்டு அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.

எனவே, உரியளவு டீசல் வழங்கப்படுகின்றமையால், பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது முதல் டீசலைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபடுவதாக அஞ்சன ப்ரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கட்டண குறைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, கொவிட் காலத்தில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக, பேருந்து கட்டணம் 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

ஆனால், தற்போது கொவிட் பரவல் நிலை இல்லாதமையால், பேருந்தில் பயணிகள் நின்றவாறும் பயணிக்கின்றனர்.

எனவே, அதிக கட்டணத்தை செலுத்திய பயணிகளுக்கு அந்தக் கட்டணம் குறைவடைய வேண்டும்.

அதனை, போக்குவரத்து ஆணைக்குழு குறைத்து தமது அனுமதியை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *