
மத்திய மாகாணம் உட்பட ஐந்து மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 850 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஐவர் பலியாகியுள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார். நால்வர் காயமடைந்துள்ளனர். ஆயிரத்து 692 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும், 58 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.சீரற்ற காலநிலையால் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கே கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்