குறைவடைந்த பால் உற்பத்தி; புரதச்சத்துக் குறைபாட்டால் மக்கள் அவதி!

பால் உற்பத்தி நாற்பது வீதமாக குறைந்துள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்நடை தீவனம், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றாக்குறை,
இறக்குமதி தடை காரணமாக உள்ளூர் பால் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் புரதச்சத்துக் குறைபாட்டால் மக்கள் அவதியுறுவதாகவும், புரதத் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு குழந்தைக்கு தினமும் 150 மில்லி பால் கொடுக்க வேண்டியிருந்தாலும், அந்தளவு கொடுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

எரிபொருள் பற்றாக்குறையால் கால்நடைத் தொழிலுக்குத் தேவையான தீவனம் மற்றும் இதர பொருட்கள் மற்றும் திரவப் பால் கொண்டு செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *