மட்டக்களப்பு வந்தாறுமூலை அகம் ஆதரவுக் கரங்கள் நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!(படங்கள் இணைப்பு)

நமக்காக நாம்’ என்ற தொணிப்பொருளில் மட்டக்களப்பு வந்தாறுமூலை அகம் ஆதரவுக் கரங்கள் நிறுவனத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று (6) வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி அமைப்பின் தலைவர் த.நவதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பதிவாளர் திருமதி த.பஞ்சாட்ச்சரம், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஆ.சசிதரன், அகம் ஆதரவுக் கரங்கள் நிறுவனத்தின் பொருளாளர்.லெ.தேவப்பிரதீபன், ஆலோசகர் ந.பஞ்சாட்சரம் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிந்துவரும் பிரதேச இளைஞர்களின் நிதி சேகரிப்பில் இருந்து இவ் மனிதநேய உதவியானது அகம் ஆதரவுக் கரங்கள் நிறுவனத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *