பசு மாடுகளை திருடி விற்ற கடற்படை வீரர்!

மூன்று பசு மாடுகளை கொள்ளையிட்டு மூன்று லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்த கடற்படை வீரர் ஒருவரை ஹொரவபொத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஹொரவபொத்தானை விலேவெவ பிரதேசத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கடற்படை தலைமையகத்தில் சேவையாற்றும் 27 வயதான இந்த கடற்படை வீரர், விடுமுறையில் தனது சொந்த ஊரான விலேவெவ பிரதேசத்தில் சென்றுள்ளார்.

மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மூன்று பசுக்கள் காணாமல் போயுள்ளதாக அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நேற்று ஹொரவபொத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவி வீட்டார் சீதனமாக வழங்கியவை எனக் கூறி சந்தேக நபர் பசு மாடுகளை திருடியுள்ளார்.

மாடுகளை கொள்வனவு செய்த நபரிடம் இருந்து அவற்றை கைப்பற்றிய பொலிஸார்
திருடப்பட்ட இந்த மாடுகள் ஹொரவபொத்தனை வஹலாவித்தவெவ பிரதேசத்தை ஒருவரிடம் விற்பனை செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் மூன்று மாடுகள் அதனை கொள்வனவு செய்த நபரின் வீட்டில் இருந்த நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் மாடுகளை விற்று பெறப்பட்ட பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபா பணத்தை கைப்பற்றியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *