யாழ். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையானது வெளிநோயாளர் காயம் தொடர்பான கண்காணிப்புக்காக (OPD) இரண்டாவது தடவையாகவும் முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும், குறித்த வைத்தியசாலையின் விடுதி நோயாளர் பிரிவு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதன்போதே, மேற்குறிப்பிட்ட பிரிவுகளில், 2020ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை பராமரிப்பு வைத்தியசாலைகளில் ஊர்காவற்துறை வைத்தியசாலை அகில இலங்கை ரீதியில் விருதுகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.