வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளைக் கருத்திற் கொண்டு, புத்தளத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால், வடமாகாண முஸ்லிம்களின் பலவந்தமான வெளியேற்றத்தின் 31வது வருட துயர நாளை நினைவுகூறு முகமாக சர்வதேச யாழ் முஸ்லிம் சமூகம் அமைப்பினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
அதன்படி,புத்தளம் நகரம், கற்பிட்டி, நுரைச்சோலை, பாலாவி, நாகவில், கரிக்கட்டை, ரத்மலயாய, தில்லையடி, ஆகிய இடங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டியில் “1990ம் ஆண்டு வடமாகான முஸ்லிம்கள் புலிப்பயங்கரவாதிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட கறுப்பு ஒக்டோபர் நாள் 31 ஆண்டுகள் துயர நாள்” என்று எழுதப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


